Saturday, November 08, 2003

 
போன வாரம் எழுதிய குறிப்பு சரியாக போஸ்ட் ஆகவில்லை. கஷ்டப்பட்டு எழுதிய பிறகு 'போஸ்ட்' -ஐ அழுத்தியவுடன், அழகான தமிழ் அலங்கோலமாகி விட்டது. என்னுடைய முதல் குறிப்பை 'ப்லாகரி'ல் நேராக எழுதாமல், சுரதாவின் யுனிகோடு பக்கத்தில் எழுதி பின்னர் 'ப்லாகரி'ல் ஒட்டினேன். பிறகு இந்த எ-கலப்பை மற்றும் யுனிகோடு தட்டச்சுப்பெயர்ப்பு (Unicode Keymap) பற்றி அறிந்தவுடன், போன வாரம் 'ப்லாகரி'ல் நேராக எழுதலாமென்று முயற்சி செய்தேன். என்ன முயன்றும் அந்த அலங்கோலத்தை சரி செய்ய முடியவில்லை. அட அதுதான் முடியவில்லை, என்ன செய்தால் அது போல ஆகிறது என்று தெரிந்து கொண்டு, இனி அதைத் தவிர்க்கலாம் என்று பார்த்தால், அப்புறம் சோதனையாக போஸ்ட் செய்தது எல்லாம் சரியாக இருந்து தொலைத்து விட்டது. 'மர்ஃபிஸ் லா' (Murphy's Law) என்று கூறுவார்களே அது போல.
எனவே தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத நான் மீண்டும் இந்த வாரம் 'ப்லாகரி'ல் நேராக எழுதி போஸ்ட் செய்ய முயல்கிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதால், இந்த முறை 'போஸ்ட்'டை அழுத்துவதற்கு முன் நான் எழுதியதை 'வேர்ட்பேடி'ல் (WordPad) நகல் எடுத்து பாதுகாக்கப் போகிறேன்.

This page is powered by Blogger. Isn't yours?